Connect with us

✈️ சென்னை விமான நிலையத்தில் விஜய் கேள்வி… சிரித்தபடி தவிர்த்து சென்ற த்ரிஷா!

Cinema News

✈️ சென்னை விமான நிலையத்தில் விஜய் கேள்வி… சிரித்தபடி தவிர்த்து சென்ற த்ரிஷா!

சென்னை விமான நிலையத்தில் நடிகை த்ரிஷா வந்தபோது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வெளிநாட்டு பயணத்திற்காக வந்திருந்த த்ரிஷாவை பார்த்த செய்தியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அவரைச் சுற்றி கூடியனர். அப்போது ஊடகத்தினர் நடிகர் விஜய் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் அந்த கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல், த்ரிஷா சிரித்தபடியே அதை தவிர்த்து விரைவாக உள்ளே சென்றார். இந்த தருணத்தை பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விஜய் மற்றும் த்ரிஷா குறித்து சமீப காலமாக இணையத்தில் பல்வேறு வதந்திகள் பேசப்பட்டு வரும் நிலையில், விமான நிலையத்தில் நடந்த இந்த நிகழ்வு ரசிகர்களிடையே மேலும் ஆர்வத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிலர் இது சாதாரண சம்பவம் என்று கூறினாலும், பல ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த சிறிய சம்பவமே தற்போது கோலிவுட் ரசிகர்களிடையே பெரிய விவாதமாக மாறியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top