Connect with us

வரலாறு படைக்குமா இந்தியாவின் இளம்படை..? ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு..!!

Featured

வரலாறு படைக்குமா இந்தியாவின் இளம்படை..? ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு..!!

ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பை தொடர் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது இத்தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணியின் பட்டியல் வெளியாகி உள்ளது.

2024ம் ஆண்டுக்கான ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பை தொடர் வரும் 26 முதல் டிச.4ம் தேதி வரை அனல் பறக்க ஹாக்கி ரசிகர்களின் ஆரவாரத்துடன் கோலாகலமாக நடைபெற உள்ளது .

ஆசிய கண்டத்தின் நாடுகளை சேர்ந்த பல அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாட உள்ள நிலையில் தற்போது இத்தொடரில் விளையாட போகும் 20 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது .

ஏற்கனவே 2004, 2008, 2015, 2023 என இந்திய அணி 4 ஆண்டுகள் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளதால் எதிர்வரும் தொடரில் இந்திய அணி நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற இருக்கும் இந்த மாபெரும் தொடரில் இந்தியாவின் இளம் படை கோப்பையை வென்று சாதனை படைக்குமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது சென்னை குடும்பநல நீதிமன்றம்..!!

More in Featured

To Top