Connect with us

பேட்டிங்கில் வெளுத்து வாங்கும் இந்திய அணி : சச்சினின் மற்றொரு சாதனையை முறியடித்தார் விராட் கோலி..!!

CWC23

பேட்டிங்கில் வெளுத்து வாங்கும் இந்திய அணி : சச்சினின் மற்றொரு சாதனையை முறியடித்தார் விராட் கோலி..!!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்று அபாரமான பேட்டிங்கை இந்திய அணி செய்து வருகிறது . இதில் மிரட்டல் பேட்டிங்கை செய்து வரும் விராட் கோலி மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சினின் இரு பிரம்மாண்ட சாதனைகளை முறியடித்துள்ளார்.

மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் தற்போது நடைபெற்று வரும் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய – நியூசிலாந்து அணிகள் ஒன்றுக்கொன்று மல்லுக்கட்டி வருகிறது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது .

வழக்கம் போல் சிறப்பான தொடக்கத்தை கொடுத்த கேப்டன் ரோஹித் 47 ரன்களில் ஆட்டமிழக்க நிதானமாக ஆடி வந்த கில் 79 ரன்கள் அடித்த நிலையில்..Injury ஆகி retired hit ஆகிவிட்டார் . பின்னர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் ஷ்ரேயஸ் .

இருவரும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்ய அடுத்தடுத்து அரை சதம் கடந்து அசத்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி தற்போது மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சினின் இரு பிரம்மாண்ட சாதனைகளை அவர் முன்னே முறியடித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் விளாசி, கிரிக்கெட் வரலாற்றில் பிரமாண்ட சாதனையை படைத்துள்ளார் ‘கிங்’ கோலி

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் விளாசி தற்போது முதல் இடத்தில் உள்ளார் இந்திய வீரர் விராட் கோலி!

விராட் கோலி – 50
சச்சின் – 49
ரோஹித் ஷர்மா – 31
ரிக்கி பாண்டிங் – 30

இதையடுத்து ஒரு உலக கோப்பை சீசனில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.

விராட் கோலி (2023) – 674* (10 போட்டிகள்)
சச்சின் டெண்டுல்கர் (2003) – 673 (11 போட்டிகள்)

இதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 113 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 44 ஓவர்களில் 333 ரங்களுக்கு 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து இந்திய அணி பிரமாதமாக விளையாடி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மிளகாய்ப் பொடி தூவி மணப்பெண் கடத்தல் - ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

More in CWC23

To Top