Connect with us

ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்த இந்திய வீரர்கள் – 110 ரன்களில் அபார வெற்றி பெற்றது இலங்கை அணி..!!

Featured

ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்த இந்திய வீரர்கள் – 110 ரன்களில் அபார வெற்றி பெற்றது இலங்கை அணி..!!

இந்திய அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடிய இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி கெத்து காட்டியுள்ளது.

டி20 உலகக் கோப்பை மற்றும் ஜிம்பாவே தொடரை வெற்றியுடன் முடித்துள்ள இந்திய அணி அடுத்ததாக இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது . அங்கு இலங்கை அணிக்கு எதிராக 3 டி20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது.

இதில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டி 20 தொடரை வெற்றிகரமாக கைப்பற்றிய இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வந்தது .

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடரில் இன்று 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது . இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது .

இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசாங்க மற்றும் பெர்னாண்டோ களமிறங்கினர். அதிரடியான தொடக்கத்தை கொடுத்த இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தனர் . இதில் சிறப்பாக விளையாடிய நிசாங்க 45 ரன்களில் வெளியேற மறுமுனையில் விளையாடி வந்த பெர்னாண்டோவும் 96 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

இதையடுத்து வந்த மெண்டிஸ் 59 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க அணியின் ஸ்கோர் 200 ஐ கடந்தது . இறுதியில் 50 ஓவர்கள் 7 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 248 ரன்கள் எடுத்தது . இதையடுத்து 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது.

ஆரம்பம் முதல் சற்று தடுமாற்றத்துடன் ஆடி வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தனர். ஓரளவு தாக்கு பிடித்து விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 35, விராட் கோலி 20, ரியான் பராக் 15 தவிர அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

26.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 138 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை ஒப்புக்கொண்டது . இதன்மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.

திட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்குப் பிறகு இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி சாதனை படைத்துள்ளது.

More in Featured

To Top