Connect with us

விபத்தில் சிக்கிய நபரின் உயிரை காப்பாற்றிய இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி – வைரல் வீடியோ

Featured

விபத்தில் சிக்கிய நபரின் உயிரை காப்பாற்றிய இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி – வைரல் வீடியோ

உத்தரகாண்ட் மாநிலத்தில் விபத்தில் சிக்கிய அடையாளம் தெரியாத ஒரு நபரின் உயிரை காப்பாற்றிய இந்திய கிரிக்கெட் வீரர் ஷமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது .

நைனிடாலில் மலை பகுதியில், கிரிக்கெட் வீரர் ஷமியின் வாகனத்திற்கு முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று திடீரென வழியில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனடியாக காரில் இருந்து இறங்கிய ஷமி மற்றும் வேறு சிலர் ஓடி சென்று அந்த காரில் இருந்த நபரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

இந்த சம்பவம் குறித்து இன்ஸ்டாகிராமில் , வீடியோ ஒன்றையும் ஷமி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது :

விபத்தில் சிக்கிய நபர் அதிர்ஷ்டக்காரர். கடவுள் அந்த நபருக்கு 2-வது முறையாக வாழ்க்கையை கொடுத்திருக்கிறார். நைனிடால் அருகே, மலை பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார், திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. நாங்கள் அவரை பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தோம் என பதிவிட்டு உள்ளார்.

விபத்தில் சிக்கிய அடையாளம் தெரியாத ஒரு நபரின் உயிரை துளியும் யோசிக்காமல் ஓடிச்சென்று காப்பாற்றிய இந்திய கிரிக்கெட் வீரர் ஷமிக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது .

https://www.instagram.com/reel/C0E3eCFCB3U/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top