Connect with us

Toss வென்ற இந்திய அணி…முதல் T20 போட்டி..வெற்றி யாருக்கு | IND vs AUS..

Sports

Toss வென்ற இந்திய அணி…முதல் T20 போட்டி..வெற்றி யாருக்கு | IND vs AUS..

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது…இந்த விளையாட்டில் இந்திய அணியில் அதிகமான இளம் வீரர்கள் இருக்கின்றனர்…

இன்னும் சற்று நேரத்தில் இந்த போட்டி ஆரம்பமாகிறது…இரு அணிகளும் கடைசியாக உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மோதின இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்ற நிலையில், உலகக்கோப்பை தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது…இன்று விளையாட்டு அதன் காரணமாகவே விறுவிறுப்பு இருக்கும் என தெரிகின்றது…

விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது…இந்த ஆட்டம் இந்தியா அணிக்கு அதிகம் சாதகமாக இருப்பதாக தெரிகின்றது..

இன்றைய மேட்ச்சில் விளையாடும் இந்திய வீரர்கள் – ருதுராஜ் கெய்க்வாட்,யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன்,சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்,பிரசித் கிருஷ்ணா ஆகியோர் விளையாடுகின்றனர்..

ஆஸ்திரேலியா அணி சார்பில் மேத்யூ ஷார்ட், ஸ்டீவன் ஸ்மித், ஜோஷ் இங்கிலிஸ், ஆரோன் ஹார்டி, மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட்,சீன் அபோட், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், நாதன் எல்லிஸ்,தன்வீர் சங்கா…ஆகியோர் விளையாட இருக்கின்றனர்..என்ன நடக்க போகிறது என்று பார்ப்போம்…5 போட்டிகள் உள்ள T 20 இதுவாகும்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Sports

Advertisement
 

Trending

 
Advertisement
To Top