Connect with us

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி உடல்நலக்குறையால் காலமானார்..!!

Cinema News

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி உடல்நலக்குறையால் காலமானார்..!!

இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி உடல்நலக்குறையால் இலங்கையில் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என ரசிகர்களால் அன்போடு போற்றப்படுபவர் இசைஞானி இசையமைப்பாளர் இளையராஜ . இவருக்கு பவதாரணி என்ற மகளும் மகளும், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என இரு மகன்களும் உள்ளனர் .

மூவருமே தந்தையை போல் இசை சார்ந்த விஷயங்களில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர் அதிலும் குறிப்பாக யுவனின் இசைக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது .

இதில் தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் மட்டும் அதிகம் பவதாரிணி பாடியுள்ளார். இவர் இளையராஜா இசையில் பாரதி படத்தில் பாடிய மயில்போல பொண்ணு ஒண்ணு பாடலுக்கு சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரிணி இலங்கையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மெல்ல மெல்ல குணமடைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன் காலமாகி உள்ளார்.

பாவதாரணியின் மரணம் இளையராஜாவின் குடும்பத்தை மட்டும் பாதிக்காமல் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பவதாரிணி இலங்கையில் உயிரிழந்த நிலையில் நாளை மாலை அவரது உடல் சென்னைக்கு கொண்டவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top