Connect with us

அன்று மன்னர்கள் செய்ததை இன்று மோடி செய்துள்ளார் – பிரதமரை புகழ்ந்து தள்ளிய இளையராஜா..!!

Cinema News

அன்று மன்னர்கள் செய்ததை இன்று மோடி செய்துள்ளார் – பிரதமரை புகழ்ந்து தள்ளிய இளையராஜா..!!

“இந்தியாவில் எத்தனை பிரதமர்கள் வந்திருந்தாலும், ராமர் கோயில் கட்டிய வரலாறு மோடிக்குதான் கிடைத்துள்ளது. அன்று மன்னர்கள் செய்ததை இன்று பிரதமர் மோடி செய்துள்ளார் என இளையராஜா தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.

மிகவும் நல்ல நேரமான 12 மணி 29 நிமிடங்கள் முதல் 12 மணி 30 நிமிடங்களில் இந்த நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பால ராமர் சிலை பிரதிஷ்டை இன்று செய்யப்பட்டது.

பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி முதலில் பூஜை செய்தார். அப்போது ராம பஜனை பாடல்கள் பாடப்பட்டன.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்டு நிலையில் ஏராளமானோர் இதனை கண்டு களித்தனர் .

இந்நிலையில் சென்னை நாரதகான சபாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளையராஜா மேடையில் சிறப்புரை ஆற்றினார். அப்போது அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் இளையராஜா பேசியுள்ளார்.

ராமர் கோயில் பற்றி பேசும் போதே கண்ணீர் வருகிறது. அயோத்தியில் இன்று நான் இல்லாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

ராமர் கோயில் பற்றி பேசும் போதே கண்ணீர் வருகிறது. அயோத்தியில் இன்று நான் இல்லாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என இளையராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top