Connect with us

ஆர்யா நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ..!!

Cinema News

ஆர்யா நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ..!!

ஆர்யா நடிப்பில் புதிதாக உருவாகி உள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் சில துள்ளலான நாயகன்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா . நல்ல பல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவரது நடிப்பில் சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அந்தவகையில் தற்போது இவரது நடிப்பில் சிறப்பாக தயாராகி உள்ள திரைப்படமே மிஸ்டர் எக்ஸ்.

மனு ஆனந்த் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஆர்யா சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா உள்ளிட பலர் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக் நடித்துள்ளார். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

விறுவிறுப்பாக உருவாகி வந்த இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top