Connect with us

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று இரவு வெளுத்துவாங்கபோவும் கனமழை..!!

Featured

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று இரவு வெளுத்துவாங்கபோவும் கனமழை..!!

தமிழ்நாட்டில் இன்று இரவு 14 மாவட்டங்களில் கனமழை வெளுத்துவாங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இணர் இரவு முதல் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top