Connect with us

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் – ரேபிடோ நிறுவனத்தின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!!

Featured

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் – ரேபிடோ நிறுவனத்தின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!!

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ரேபிடோ நிறுவனம் சார்பில் வெளியாகி உள்ள அசத்தல் அறிவிப்பு அம்மாநிலத்தில் உள்ள மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

தெலங்கானா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் அம்மாநிலத்தில் பிரச்சாரம் செய்வதற்காக நாட்டில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் படையெடுத்து வந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் வேறு எங்கும் கொடுக்காத ஸ்பெஷல் அறிவிப்பு ஒன்றை ரேபிடோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பு தெலங்கானா மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்லும் மக்களுக்கு, இலவசமாக பைக் சேவையை வழங்க உள்ளதாக ரேபிடோ நிறுவனம் அறிவித்துள்ளது.

நவ.30ம் தேதி விறுவிறுப்பாக நடைபெறவுள்ள இந்த வாக்குப்பதிவில், வாக்களிப்பை அதிகரிக்கவும், பொதுமக்களின் சிரமங்களை குறைக்கவும் ஹைதராபாத்தில் உள்ள மையங்களுக்கு இந்த சேவையை வழங்க உள்ளதாக ரேபிடோ நிறுவனத்தின் இணை நிறுவனர் பவன் குண்டுபலி தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ரேபிடோ நிறுவனம் சார்பில் வெளியாகி உள்ள இந்த அசத்தல் அறிவிப்பு அம்மாநிலத்தில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top