Connect with us

ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரவேற்ற நீட்டா அம்பானி..!!

Featured

ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரவேற்ற நீட்டா அம்பானி..!!

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி பலகோடி கொடுத்து போராடி வாங்கியுள்ள நிலையில் அவரை மீண்டும் மும்பை அணிக்கு மனதார வரவேற்பதாக மும்பை அணியின் நிறுவனரான நீட்டா அம்பானி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் தங்கள் அணியின் சில வீரர்களை விடுவித்து கொள்ளவும் சில வீரர்களை தக்கவைத்து கொள்ளவும் அனைத்து அணிகளுக்கும் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்களின் பெயர்களை தற்போது ஒவ்வொரு அணிகளும் வெளியிட்டு வருகின்றன .

அந்தவகையில் 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி பலகோடி கொடுத்து போராடி வாங்கியுள்ளது . இதனால் குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 2 வருடம் சென்று மீண்டும் மும்பை அணிக்கு வந்துள்ள ஹர்திக் பாண்ட்யாவை மனதார வரவேற்பதாக மும்பை அணியின் நிறுவனரான நீட்டா அம்பானி தெரிவித்துள்ளார்.

மீண்டும் தாய் வீட்டுக்கு திரும்பியுள்ள ஹர்திக் பாண்ட்யாவை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இது மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தின் சந்திப்பு. சாதாரண இளம் வீரராக இருந்து, இப்போது இந்திய அணியின் நட்சத்திர வீரராகிவிட்டார். அவரின் எதிர்காலம் மற்றும் மும்பையின் எதிர்காலத்தை காண ஆவலாக உள்ளோம் என நீட்டா அம்பானி தெரிவித்துள்ளார்.

ஹர்டிக் பாண்டியா தலைமையில் களம் கண்ட குஜராத் அணி ஒரு முறை கோப்பையை வென்றுள்ள நிலையில் தற்போது மும்பை அணியில் இவர் இடம் பெற்றுள்ளது அந்த அணிக்கு கூடுதல் சேர்த்துள்ளதாகவும் நிச்சயம் இந்த முறை மும்பை அணி கோப்பையை வெல்லும் என்றும் ரசிகர்கள் கருத்து கோரி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top