Connect with us

கனமழை எதிரொலி : ஆந்திரா, தெலங்கானா மக்களுக்கு நடிகர் ராம் சரண் நிதியுதவி..!!

Cinema News

கனமழை எதிரொலி : ஆந்திரா, தெலங்கானா மக்களுக்கு நடிகர் ராம் சரண் நிதியுதவி..!!

ஓயாமல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலங்கானா மாநில அரசுகளின் முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு நடிகர் ராம் சரண் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது . இரு மாநிலங்களில் உள்ள பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால் அங்குள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து தண்ணீரில் தத்தளித்து வருகிறது .

இந்நிலையில் ஆந்திராவில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் கிட்டத்தட்ட பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் நிவரான பணிக்காக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்களின் பேரிடர் நிவாரண நிதிக்கு நடிகர் ராம் சரண் 1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

கடும் மழை மற்றும் வெள்ளத்தால் அத்யாவசிய தேவைகளை கூட பெற முடியாமல் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு தவித்து வரும் மக்களுக்கு பல தரப்பில் இருந்து நிவாரண உதவிகள் கிடைத்து வரும் நிலையில் திரை நட்சத்திரங்கள் பலரும் நிதியுதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top