Connect with us

IPL தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் – டெல்லி அணிகள் பலப்பரீட்சை..!!!

Featured

IPL தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் – டெல்லி அணிகள் பலப்பரீட்சை..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று ராஜஸ்தான் – டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஜெய்ப்பூரில் உள்ளபிரபல கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் – டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

நடப்பு தொடரில் பஞ்சாப் அணியை எதிர்கொண்ட டெல்லி அணி இறுதிவரை போராடி தோல்வியை சந்தித்தது.

இதுபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் லக்னோ அணியை எதிர்கொண்ட ராஜஸ்தான் அணி சிறப்பாக விளையாடிய தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி இரண்டாவது வெற்றியை பெற போகிறது எந்த அணி இரண்டாவது தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top