Connect with us

‘தங்கலான்’ படத்தின் முதல் பாடல் குறித்து ப்ரோமோ அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்..!!

Cinema News

‘தங்கலான்’ படத்தின் முதல் பாடல் குறித்து ப்ரோமோ அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்..!!

பா.ரஞ்சித் இயக்கத்தில் தரமாக உருவாகி உள்ள ‘தங்கலான்’ படத்தின் முதல் பாடல் குறித்த ப்ரோமோ ஒன்றை அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

சீயான் விக்ரமின் காட்டுத்தனமான நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் ‘தங்கலான்’ . பா. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரமுடன் சேர்ந்து மாளவிகா மோகன் , பார்வதி , பசுபதி உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிறீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மெல்லிசை நாயகன் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘மினிக்கி மினிக்கி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளதாக அந்த ப்ரோமோ மூலம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top