Connect with us

பூஜையுடன் தொடங்கியது ‘சித்தார்த் 40’ படத்தின் படப்பிடிப்பு..!!

Cinema News

பூஜையுடன் தொடங்கியது ‘சித்தார்த் 40’ படத்தின் படப்பிடிப்பு..!!

பிரபல தென்னிந்திய நடிகராக வலம் வரும் நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

தமிழ் , ஹிந்தி , தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து கலக்கல் நாயகனாக வலம் வருபவர் நடிகர் சித்தார்த் . ஹீரோவாக இருந்தாலும் சரி குணசித்ர கதாபாத்திரகமாக இருந்தாலும் சரி தனது முழு பங்களிப்பை கொடுத்து ரசிகர்களின் மனதில் இன்று வரை நிலைத்து நிற்கிறார்.

இந்நிலையில் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சித்தா திரைப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்ட நிலையில் இவரது அடுத்த படம் குறித்த டக்கர் அப்டேட் வெளியாகி உள்ளது.

சித்தார்த் நடிக்கும் அவரது 40வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கும் இப்படத்தில் சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா உள்பட பல இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளனர்.

இப்படத்தின் பூஜை குறித்த அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top