Connect with us

“ON THE WAY NANBA” ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் தளபதியின் GOAT படம்..!!

Cinema News

“ON THE WAY NANBA” ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் தளபதியின் GOAT படம்..!!

தளபதி விஜய்யின் கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் தற்போது இப்படம் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது வேற லெவெலில் உருவாகி உள்ள திரைப்படமே தி கோட் . BGM KING யுவன் இசையில் AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பிரஷாந்த் , பிரபுதேவா , சினேகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் 5 ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு படத்தின் டிரைலரும் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் ப்ரீ புக்கிங்கிலும் கோட் படம் பட்டய கிளப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படம் இதுவரை உலகளவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது . மேலும் ப்ரீ புக்கிங் மட்டுமே ரூ. 100 கோடி வரை வசூல் வரும் எனவும் ஒருபக்கம் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

More in Cinema News

To Top