Connect with us

பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்வியால் செய்தியாளர்களுடன் மல்லுக்கட்டிய நடிகர் ஜீவா..!!

Cinema News

பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்வியால் செய்தியாளர்களுடன் மல்லுக்கட்டிய நடிகர் ஜீவா..!!

பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்வியால் நடிகர் ஜீவா செய்தியாளர்களுடன் மல்லுக்கட்டிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி செம வைரலாகி வருகிறது.

மலையாள திரைத்துறையில் பாலியல் குற்றச்சாட்டுகள் பூதாகரமானதைத் தொடர்ந்து நடிகைகள் அனைவரும் தங்களுக்கு நேர்ந்த துயர சம்பவங்கள் குறித்து தைரியமாக பேசி வருகின்றனர் .

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் கேரளாவில் மட்டுமல்ல அனைத்து மொழி சினிமாவிலும் பெண்களுக்கு பாலியல் சீண்டல் இருப்பதாக ஜூனியர் முதல் சீனியர் நடிகைகள் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்வியால் நடிகர் ஜீவா செய்தியாளர்களுடன் மல்லுக்கட்டிய வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஜிவா இன்று தேனியில் உள்ள ஒரு துணிக்கடை திறப்பு விழாவுக்கு சென்றுள்ளார் . விழாவுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஜீவாவிடம் பல கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டனர் .

அப்போது ஒரு செய்தியாளர் நடிகைகள் பாலியல் சர்ச்சை பற்றி கேள்வியை எழுப்பினார் இந்த கேள்விக்கு காட்டமாக பதிலளித்த ஜீவா கூறியதாவது :

நல்ல விஷயத்திற்கு வந்திருக்கிறேன், இப்படி அபசகுனமா கேக்குறீங்க அறிவில்லையா என நடிகர் ஜீவா கோபத்தில் கொந்தளிக்க நீங்கள் எப்படி எங்களை அறிருக்கா என்று கேட்கலாம் என அங்கிருந்த சேத்தியாளர்கள் ஜீவாவிடம் வாக்குவாதம் செய்ய அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதுமட்டுமின்றி ஜீவாவின் இந்த கோபமாக பேச்சுக்கு கண்டன குரல்களும் எழுந்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் சீர்கேட்டை வீடியோவாக வெளியிட்ட ஆவின் ஊழியர் பணி நீக்கம் - இ.பி.எஸ் கண்டனம்..!!

More in Cinema News

To Top