Connect with us

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! என்னப்பா இப்படி ஆகிருச்சு..

Cinema News

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! என்னப்பா இப்படி ஆகிருச்சு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரை நேரில் கண்டு வாழ்த்து கூற காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் . அவரது பிறந்த நாளை முன்னிட்டு திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு அவரை காண வந்த ஏராளமான ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது .

ரஜினிகாந்த் வீட்டின் முன் கூடிய 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள் விசில் அடித்தும், தலைவா, சூப்பர் ஸ்டார் வாழ்க, எங்கள் பாபாஜியே.. தலைவா வெளியே வா தலைவா உன்னை பார்க்க வேண்டும். உன்னை பார்க்காமல் போக மாட்டோம் என்று உற்சாக கோஷமிட்டனர்.

இன்று எப்படியாவது ரஜினிகாந்தை பார்த்து வாழ்த்து சொல்லியே ஆகவேண்டும் என காத்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது உதவியாளர்கள் இனிப்புகளை வழங்கினர். நீங்கள் போய் தலைவரை வர சொல்லுங்கள் என ரசிகர்கள் பல மணிநேரம் காத்திருந்தும் அவரை பார்க்க முடியாததால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் சத்தமாக கோஷமிட்டனர் .

இதையடுத்து ரஜினிகாந்த் அவர்கள் வீட்டில் இல்லை என்றும் இணைப்புகளை அவர் தான் வழங்க சொன்னார் தயவு செய்து இணைப்புகளை வாங்கிக்கொண்டு கலைந்து செல்லுங்கள் என ரஜினிகாந்தின் உதவியாளர்கள் கூறியதால் ஏமாற்றமடைந்து ரசிகர்களை அங்கிருந்து வருத்தத்துடன் சென்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  லக்னோவை அவர்கள் மண்ணிலேயே வீழ்த்துமா ராஜஸ்தான்..? டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு..?

More in Cinema News

To Top