Connect with us

தனுஷின் ராயன் படத்தில் இணைந்த பிரபல நடிகர் – வரவேற்பு போஸ்டர் வெளியிட்டது படக்குழு

Cinema News

தனுஷின் ராயன் படத்தில் இணைந்த பிரபல நடிகர் – வரவேற்பு போஸ்டர் வெளியிட்டது படக்குழு

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்க உள்ள அவரது 50 ஆவது படமான ராயன் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் தனுஷ் . இவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்ணிட்டு வெளியான கேப்டன் மில்லர் படம் எதிர்பார்ப்பை மிஞ்சிய வசூலை ஈட்டி வெற்றி படமாக உருவெடுத்தது .

இந்நிலையில் நடிகர் தனுஷ் ஒரு பக்கம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் மீண்டும் தனது டைரக்டர் பணியை இனிதே தொடக்கி உள்ளார்.

அந்தவகையில் தற்போது நடிகர் தனுஷின் 50 ஆவது படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளார் . ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது .

ராயன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் , செல்வராகவன் , எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் மேலும் ஒரு பிரபல நட்சத்திரம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை மிரட்டலான போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

More in Cinema News

To Top