Connect with us

கோலாகலமாக தொடங்கியது WPL கிரிக்கெட் தொடர் – முதல் போட்டியில் டெல்லி – மும்பை அணிகள் மோதல்

Featured

கோலாகலமாக தொடங்கியது WPL கிரிக்கெட் தொடர் – முதல் போட்டியில் டெல்லி – மும்பை அணிகள் மோதல்

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அதிகம் விரும்பும் தொடராக வலம் வருவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தான். ஆடவர் பங்கேற்கும் ஐபிஎல் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது வீராங்கனைகள் பங்கேற்கும் மகளிர் ப்ரீமியர் லீக் (WPL) தொடர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .

ஐபிஎல் தொடரை போலவே இந்த தொடரிலும் இந்திய மற்றும் வெளிநாட்டு வீராங்கனைகள் ஏலத்தின் மூலம் அவரவர் அணிகளுக்கு எடுக்கப்படுகிறது .

மும்பை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயின்ட்ஸ் மற்றும் உ.பி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன.

அந்தவகையில் நடப்பாண்டுக்கான WPL கிரிக்கெட் தொடர் இன்று கோலாகலமாக தொடங்கி உள்ளது

இந்நிலையில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை அணி டெல்லி அணியை எதிர்கொள்கிறது.

விறுவிறுப்புக்கு பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெறும் இந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராகுல்காந்திக்கு இட ஒதுக்கீடு பற்றி என்ன தெரியும்..? - வானதி சீனிவாசன் விமர்சனம்..!!

More in Featured

To Top