Connect with us

சமூக வலைதளங்களில் பரவிய பொய்ச் செய்தி – காட்டமாக பதில் கொடுத்த ரிஷப் பண்ட்..!!

Featured

சமூக வலைதளங்களில் பரவிய பொய்ச் செய்தி – காட்டமாக பதில் கொடுத்த ரிஷப் பண்ட்..!!

சமூக வலைதளங்களில் தன் மீது பொய் செய்திகள் தொடர்ந்து பரவி வருவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் இளம் நட்சத்திர வீரராக வலம் வருபவர் ரிஷப் பண்ட் கடந்த சில மாதங்களுக்கு முன் கோரமான கார் விபத்தில் சிக்கிய பண்ட் அதில் இருந்து மீண்டும் தற்போது மீண்டும் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் RCB அணியில் இணைய ரிஷப் பண்ட் விருப்பம் தெரிவித்ததாகவும், கேப்டன் பொறுப்பு கேட்டதால் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும், இவர் RCB-க்கு வருவதில் விராட் கோலிக்கு விருப்பம் இல்லை என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய நிலையில் தற்போது இந்த செய்திகளுக்கு ரிஷப் பண்ட் காட்டமான பதில் கொடுத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஏன் பொய்ச் செய்தியை பரப்புகிறீர்கள்? இது மிகவும் தவறான செயல். தயவு செய்து பொறுப்புடன் செயல்படுங்கள். ஒருபோதும் நம்பிக்கையற்ற சூழலை உருவாக்காதீர்கள்.

சமூக வலைதளங்களில் இதுபோன்ற தவறான செய்திகள் பரவுவது ஒன்றும் புதிது கிடையாது. இத்துடன் இது நிற்கப்போவதும் கிடையாது. நாளுக்கு நாள் இது மோசமாகிக் கொண்டேதான் போகிறது என ரிஷப் பண்ட் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திமுக அரசைக் கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் – எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..!!

More in Featured

To Top