Connect with us

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்தியர்களுக்கு விலையுயர்ந்த கார் பரிசு – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்..!!

Featured

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்தியர்களுக்கு விலையுயர்ந்த கார் பரிசு – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்..!!

பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு விலையுயர்ந்த கார் பரிசாக வழங்கப்படும் என அதிரடியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான விளையாட்டான ஒலிம்பிக் விளையாட்டு தொடர் இந்த முறை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது .

உலககெங்கும் இருக்கும் விளையாட்டு வீரர்களின் வாழ்நாள் கனவாக இருக்கும் இந்த ஒலிம்பிக் தொடரில் இம்முறை விளையாட்டு வீராங்கனைகள் 5,250 பேர், வீரர்கள் 5,250 பேர் என மொத்தம் 10,500 போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கின்றனர்

இதில் இந்தியா சார்பாக 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர் பங்கேற்றிருக்கின்றனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் களம் கண்டுள்ளனர் .

எண்ணற்ற ரசிகர்களின் ஆரவாரத்துடன் கோலாகலமாக நடைபெற்று வரும் இந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு விலையுயர்ந்த கார் பரிசாக வழங்கப்படும் என அதிரடியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் ஒவ்வொரு இந்திய வீரர், வீராங்கனைகளுக்கும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள MG Windsor கார் வழங்கப்படும் என JSW நிறுவனத் தலைவர் சஜன் ஜிண்டால் அதிரடியான இந்த அறிவிப்பி வெளியிட்டுள்ளார்.

நடப்பு ஒலிம்பிக்கில் இந்திய சார்பில் ஸ்வப்னில் குசேல் , மனு பாக்கீர் , சரபோஜித் சிங் ஆகியோர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top