Connect with us

ஜெயம் ரவியின் சைரன் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

Cinema News

ஜெயம் ரவியின் சைரன் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

ஜெயம்ரவி நடிப்பில் உருவான சைரன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அப்படத்தின் இரண்டு நாள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது .

உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் கிளாசிக் நயனகன் ஜெயம் ராவின் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் “சைரன்” .

டீசெண்டான பொருட்செலவில் தயாரான இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இவர்களுடன் பல இளம் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களும் படத்தில் முக்கிய பங்காற்றி உள்ளது

ஆக்சன் காதல் செண்டிமெண்ட் என ஆரம்பம் முதல் இறுதி வரை தரமான காட்சிகளுடன் கோர்க்கபட்ட இப்படம் பக்காவான அப்பா மகள் ஆகியோரின் பாசப்போராட்டத்தை விவரிக்கும் படமாக அமைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜெயம் ரவி சைரன் திரைப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 6 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top