Connect with us

வெற்றிநடை போடும் லால் சலாம் படத்தின் 4 நாள் வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

வெற்றிநடை போடும் லால் சலாம் படத்தின் 4 நாள் வசூல் எவ்ளோ தெரியுமா..?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம் திரைப்படத்தின் 4 நாள் வசூல் குறித்த லேட்டஸ்ட் விவரம் வெளியாகி உள்ளது.

லைக்கா நிறுவனத்தின் மாபெரும் பொருட்செலவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் லால் சலாம் . இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் .

இதுமட்டுமின்றி இப்படத்தில் மொய்தீன் பாய் எனும் கவுரவ கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க அவருடன் சேர்ந்து இந்த படத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ்வும் நடித்துள்ளார்.

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன் படு பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில் இப்படம் கடந்த 9 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குங்களில் கோலாகலமாக வெளியானது.

இப்படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படம் வெளியாகி 4 நாள் முடிவடைந்துள்ள நிலையில் மொத்தமாக ரூ. 26 கோடி வரை வசூலித்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் - லக்கோவை 10 ஓவருக்குள் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி..!!

More in Cinema News

To Top