Connect with us

சாலை விபத்தில் உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

Cinema News

சாலை விபத்தில் உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சைதை துரைசாமியின் மகனும் திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமியின் உடலுக்கு இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை முன்னாள் மேயராக இருந்தவர் சைதை துரைசாமி இவரது மகன் வெற்றி. 45 வயதாகும் இவர் பிரபல சினிமா இயக்குநர் வெற்றி மாறனிடம் பயிற்சி பெற்று ‘என்றாவது ஒருநாள்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், வெற்றி துறைசாமி கடந்த சில நாட்களுக்கு முன் இமாச்சல் பிரதேசத்திற்கு படத்திற்காக லொக்கேஷன் பார்க்க சென்றதாக கூறப்படுகிறது.

கார் ஒன்றை வாடகைக்கு எடுத்த வெற்றி துரைசாமியின் குழு லாஹல் மற்றும் ஸ்பிதியின் காசா பகுதியிலிருந்து சிம்லாவுக்கு சென்று கொண்டிருந்தனர். காரை உள்ளூரை சேர்ந்த தஞ்சின் என்ற ஓட்டுனர் தான் ஓட்டிச் சென்றுள்ளார்.

கின்னார் மாவட்டம் காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .

இந்த கோர விபத்தில் காரை ஓட்டிய தன்ஜின் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வெற்றியின் நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . ஆனால் வெற்றி துரைசாமி மாயமானார்

இதையடுத்து மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. கார் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் ஆற்றில் அவரது உடல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் வெற்றி துரைசாமியின் உடல் இன்று சென்னை கொண்டுவரப்பட்ட நிலையில் அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி துரைசாமியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளார் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  IPL 2024 : ராஜஸ்தானிடம் மீண்டும் பணிந்தது மும்பை அணி..!!!

More in Cinema News

To Top