Connect with us

அரசியலில் விஜய் கொடுத்த திடீர் எண்ட்ரியால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை – கனிமொழி எம்.பி

Featured

அரசியலில் விஜய் கொடுத்த திடீர் எண்ட்ரியால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை – கனிமொழி எம்.பி

தமிழக அரசியலில் நடிகர் விஜய் கொடுத்த திடீர் எண்ட்ரியால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தளபதி என்று ரசிகர்களால் அன்போடு போற்றப்படும் நடிகர் விஜய் கடந்த சில மாதங்களாகவே தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் மாணவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் மற்றும் வெள்ள நிவாரண உதவிகள் என தொடர்ந்து மக்கள் பணியில் தீவிரம் காட்டி வந்தார் .

அப்போதே தெரிந்துவிட்டது அவர் விரைவில் அரசியலில் களமிறங்க போகிறார் என்று அதற்கேற்றாற் போல் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்துவிட்டது .

இந்நிலையில் நடிகர் விஜயின் இந்த அரசியல் பயணத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது விஜயன் அவர்களின் அரசியல் என்ட்ரி குறித்து கனிமொழி எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி கூறியதாவது :

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு எல்லா உரிமைகளும் உள்ளது; சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிடப் போவதால், திமுகவுக்கு நிச்சயமாக எந்த பாதிப்பும் ஏற்படாது

சாதி, மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி பிரிக்கக்கூடாது என்பதைத்தான் எல்லோருமே கூறிக்கொண்டிருக்கிறோம்; இதை இப்போது அல்ல, அப்போதிலிருந்தே தொடர்ந்து நாங்கள் கூறிக்கொண்டு இருக்கிறோம் என கனிமொழி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூப்பர் ஸ்டார் படத்தில் கேமியோ ரோலில் களமிறங்கும் மக்களின் மனம் கவர்ந்த பிரபலம் - யார் தெரியுமா..?

More in Featured

To Top