Connect with us

வசூல் மழை பொழியும் சந்தானத்தின் “வடக்குப்பட்டி ராமசாமி” திரைப்படம் – முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

Cinema News

வசூல் மழை பொழியும் சந்தானத்தின் “வடக்குப்பட்டி ராமசாமி” திரைப்படம் – முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி உள்ள வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தி முதல் நாள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை படங்களுக்கு பெயர்போன நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தானம்.இவரது நடிப்பில் உருவான வெற்றி பெற்றதா இல்லை தோல்வி பெற்றதா என்பதையெல்லாம் தாண்டி இவரது படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது என்பது ஊரறிந்த உண்மை.

அந்தவகையில் தற்போது சந்தானத்தின் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி உள்ள திரைப்படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி.

இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் சந்தானத்துடன் சேர்ந்து ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மேகா ஆகாஷ், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் வரும் நேற்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி இருக்கும் நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

படம் முழுக்க காமெடிகளை தெளித்துவிட்டருக்கும் படக்குழு எடுத்த முயற்சிகள் அனைத்தும் நல்லபடி ஒர்க்கவுட் ஆகியுள்ளதால் இப்படம் நடிகர் சந்தானத்திற்கு வெற்றிப்படமாக மாறியுள்ளது.

இந்நிலையில், மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் உலகளவில் முதல் நாள் ரூ.2 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top