Connect with us

பிரேமலு படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பையு வெளியிட்டது படக்குழு.!!!

Cinema News

பிரேமலு படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பையு வெளியிட்டது படக்குழு.!!!

‘பிரேமலு’ திரைப்படதிக்ரு மலையாளம் உள்பட பல மொழிகளில் ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்து நிலையில் தற்போது அந்த படத்தின் 2 ஆம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

மலையாளத்தில் மிக குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட பிரேமலு படத்தை கிறிஸ் ஏ.டி. இயக்கி உள்ளார் , காதல், காமெடி என மிக்ஸட் எமோஷன்கள் நிறைந்த இந்தப்படம், கடந்த பிப் மாதம் 9-ம் தேதி வெளியானது.

இப்படம் வெளியான நாள் முதல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் மலையாளத்தில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

100 கோடி வசூலில் இந்த இப்படம் கடந்த மாதம் 15-ம் தேதி தமிழ் மொழியில் தமிழக திரையரங்குகளில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது .

ஏற்கமாவே மலையாள படமான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்திற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் ‘பிரேமலு’ படத்திற்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் நஸ்லென், மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘பிரேமலு’ திரைப்படத்தின் 2ம் பாகம் வரும் 2025ம் ஆண்டில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான தாறுமாறு அப்டேட்..!!

More in Cinema News

To Top