Connect with us

லோகேஷ் கனகராஜ் கதையில் நடிக்கும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் – வெளியான டக்கர் அறிவிப்பு..!!!

Cinema News

லோகேஷ் கனகராஜ் கதையில் நடிக்கும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் – வெளியான டக்கர் அறிவிப்பு..!!!

லோகேஷ் கனகராஜ் கதையில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது .

இந்திய சினிமாவில் இருக்கும் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் .

இவரது இயக்கத்தில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 171 படம் விறுவிறுப்பாக உருவாக உள்ளது . சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் தான் இசையமைக்க உள்ளார்.

இதற்கிடையில் ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள இயக்குனர் லோகேஷ் ‘ஃபைட் க்ளப்’ என்ற படத்தையும் தயாரித்து வழங்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இவரது தயாரிப்பில் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் உருவாக்க உள்ளார்.

‘ரெமோ’, ‘சுல்தான்’ உள்ளிட்ட இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் கதையில் உருவாகும் இப்படத்துக்கு ‘பென்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நிறைய கதைகளை எழுதி வைத்திருப்பதாக கூறி வந்த நிலையில் தற்போது அந்த கதையில் ஒன்று படமாக உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரன் குவிப்பில் மீண்டும் சாதனை படைக்குமா SRH..? ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று RCB - SRH அணிகள் மோதல்..!!!

More in Cinema News

To Top