Connect with us

பிரம்மயுகம் படத்தில் கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. மம்மூட்டி கதாபாத்திரத்தின் பெயர் மாற்றம்

bramayugam-mammootty

Cinema News

பிரம்மயுகம் படத்தில் கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. மம்மூட்டி கதாபாத்திரத்தின் பெயர் மாற்றம்

பிரம்மயுகம் திரையரங்குகளில் இன்று வெளியாகும் நிலையில், படம் வெளியாவது ஒருநாள் முன்பு நேற்று, நடிகர் மம்மூட்டியின் கதாபாத்திரத்தின் பெயர் நீதிமன்ற உத்தரவுப்படி மாற்றப்பட்டுள்ளது.

இந்த படம் மந்திரவாதத்தில் ஈடுபடும் ஒருவரைப் பற்றியது எனக் கூறப்படும் நிலையில், படத்தில் தங்கள் குடும்பத்தை தீய மந்திர செயல்களில் ஈடுபடுவதுபோல் காட்டி, தங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கேரளாவில் உள்ள புஞ்சமோன் இல்லம் என்ற பிராமண குடும்பம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இதற்கு காரணம் படத்தில் மம்மூட்டியின் கதாபாத்திரம் குஞ்சமோன் என வைக்கப்பட்டதுதான். மனுதாரர் தனது மனுவில், தனது குடும்பம் வரலாற்று ரீதியாக ‘ஐதிஹிமாலா’ புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்ட சடங்கு நடைமுறைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.

இதனால் கதாப்பாத்திரத்தின் பெயர் மற்றும் அதன் பாரம்பரிய வீடு மாற்றப்படாவிட்டால், அது மனுதாரர், அவரது குடும்ப உறுப்பினர்கள், முன்னோர்கள் மற்றும் வாரிசுகள் மீது மக்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் என மனுவில் கூறப்பட்டது.

படக்குழுவினர் யாரும் படத்தின் விஷயத்தைப் பற்றி குடும்பத்தினருடன் பேசவில்லை என்றும், மேலும், சினிமாட்டோகிராஃப் சட்டம் 1952ன் பிரிவு 5இன் கீழ் படத்தின் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நீதிபதி தேவன் ராமச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரரின் கவலைகளை உணர்ந்து மம்மூட்டியின் கதாபாத்திரத்தின் பெயரை மாற்றுவதாக படக்குழு உறுதி அளித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதையடுத்து படத்தில் குஞ்சமோன் என்று இருந்த மம்முட்டி கதாபாத்திரத்தின் பெயர், தற்போது கொடுமண் என மாற்றப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மேஜர் முகுந்தன் வரதராஜனின் நினைவிடத்தில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அஞ்சலி - வைரல் போட்டோ..!!

More in Cinema News

To Top