Connect with us

குஜராத் அணியை திக்குமுக்காட வைத்த டெல்லி அணி அசத்தல் வெற்றி..!!!

Featured

குஜராத் அணியை திக்குமுக்காட வைத்த டெல்லி அணி அசத்தல் வெற்றி..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஹைதராபாத்தில் உள்ள உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் GT – DC அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து டெல்லி அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் குஜராத் அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக ஷஹா மற்றும் கில் களமிறங்கினர் . அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்ட்ட இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பேரதிர்ச்சியை கொடுத்தனர்.

அவர்களை தொடர்ந்து வந்த வீரர்களும் நிலையாக நிர்க்கமால் அடுத்ததடுத்து ஆட்டமிழந்து வெளியேற குஜராத் அணி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. ஒரு கட்டத்தில் 17.3 ஓவர்களில் 89 ரன்கள் மட்டுமே எடுத்த குஜராத் அணி ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி டெல்லி அணி பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஃப்ரேசர் மெக்குர்க் களமிறங்கினர் .

தொடக்கம் முதலே இலக்கை விரைந்து எட்ட முயன்றது அந்த அணி. பவர்பிளே ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்திருந்தது .

மெக்குர்க் 20, அபிஷேக் போரல் 15, ஷாய் ஹோப் 19, பிரித்வி 7 ரன்கள் எடுத்திருந்தனர். சுமித் குமார் 9 ரன்கள் மற்றும் பந்த் 16 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தனர்.

8.5 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்த டெல்லி அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top