Connect with us

வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவான ‘மனுசி’ படத்தின் ட்ரைலர் வெளியானது..!!!

Cinema News

வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவான ‘மனுசி’ படத்தின் ட்ரைலர் வெளியானது..!!!

வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவான ‘மனுசி’ படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் வெற்றி மாறன். இவர் இயக்கம் படங்களும் சரி இவர் தயாரிக்கும் படங்களும் சரி சமூகத்தில் முக்கிய மாற்றத்தை கொண்டுவர தூண்டும் விதமாகவே அமைந்துள்ளது .

அந்தவகையில் தற்போது இவரது தயாரிப்பில் பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா நடித்துள்ளார் . கோபி நாயர் இயக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

மனுசி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அண்ட்ரியாவுடன் சேர்ந்து நாசர் , தமிழ் , ஹக்கீம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தின் அப்டேட் கேட்டு காத்திருந்த வேளையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த ட்ரைலரை பார்க்கும்போது நிச்சயம் இந்த படம் ஒரு க்ரைம் திரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ மனுசி படத்தின் ட்ரைலர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷின் வெற்றிப் படம் ‘தேரே இஷ்க் மெய்ன்’ ஓடிடி வெளியீடு – ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு

More in Cinema News

To Top