Connect with us

சூப்பர் ஸ்டார் வீட்டில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழு – வைரல் போட்டோஸ்..!!

Cinema News

சூப்பர் ஸ்டார் வீட்டில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழு – வைரல் போட்டோஸ்..!!

ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்துள்ள நிலையில் தற்போது படக்குழுவை தனது வீட்டிற்கு அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனதார பாராட்டி உள்ளார்.

மலையாளம் மட்டுமின்றி தற்போது உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை தாறுமாறாக கொண்டாட வைத்துள்ள படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ்.

மிகவும் குறைவான பட்ஜெட்டில் மலையாளத்தில் வெளிவந்த இப்படம் வெளியான நாள் முதல் ரசிகர்களின் அமோக ஆதரவு பெற்று திரையரங்குகளில் தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்கிறது .

மலையாளத்தில் சக்கைபோடு போட்ட இப்படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் கடந்த சில நாட்களுக்கும் முன் தமிழில் வெளியானது .பொதுவாக எந்த மொழி படமாக இருந்தாலும் படம் நன்றாக இருந்தால் நல்ல வரவேற்பை கொடுக்கும் நம்ப தமிழ் ரசிகர்கள் இந்த படத்திற்கும் அமோக வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

இப்படம் உலகளவில் சுமார் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவை தனது வீட்டிற்கு அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனதார பாராட்டி உள்ளார்.

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்த முறையும் தமிழர்கள் இல்லை - ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு..!!

More in Cinema News

To Top