Connect with us

புதிய கட்சி தொடங்கிய நடிகர் விஜய் – அண்ணாமலை வாழ்த்து

Featured

புதிய கட்சி தொடங்கிய நடிகர் விஜய் – அண்ணாமலை வாழ்த்து

தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தனது அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தளபதி என்று ரசிகர்களால் அன்போடு போற்றப்படும் நடிகர் விஜய் கடந்த சில மாதங்களாகவே தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் மாணவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் மற்றும் வெள்ள நிவாரண உதவிகள் என தொடர்ந்து மக்கள் பணியில் தீவிரம் காட்டி வந்தார் .

அப்போதே தெரிந்துவிட்டது அவர் விரைவில் அரசியலில் களமிறங்க போகிறார் என்று அதற்கேற்றாற் போல் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்துவிட்டது .

இந்நிலையில் நடிகர் விஜயின் இந்த அரசியல் பயணத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது :

தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் திரு விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டான் பட இயக்குனருக்கு கோலாகலமாக நடந்து முடிந்த திருமணம் - வைரல் போட்டோஸ்

More in Featured

To Top