Connect with us

அத்துமீறும் இலங்கை கடற்படை – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

Featured

அத்துமீறும் இலங்கை கடற்படை – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

தமிழக மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி அத்துமீறி வரும் இலங்கை கடற்படை விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 28ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 8 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது.

இதையடுத்து தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி இந்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதலவர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இலங்கை கடற்படை கைது செய்துள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் .

அடிக்கடி கைது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது மீனவர்கள் சமூகத்தினருக்கு துயரை தருகிறது . அபராதம் விதிப்பது துயரத்திலுள்ள மீனவ குடும்பங்களை வேதனைக்குள்ளாக்கும்.

இழப்பை ஏற்படுத்தும் அபராதத்தை மனிதாபிமான அடிப்படையில் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எஸ்.கே.புரொடக்சன்ஸ் பெயரில் மோசடி - எச்சரிக்கை விடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்..!!

More in Featured

To Top