Connect with us

ஏங்க இதெல்லாம் ஒரு கேள்வியா – பத்திரிகையாளர் சந்திப்பில் கடுப்பான விஜய் சேதுபதி..!!

Cinema News

ஏங்க இதெல்லாம் ஒரு கேள்வியா – பத்திரிகையாளர் சந்திப்பில் கடுப்பான விஜய் சேதுபதி..!!

‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்ப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நடிகர் விஜய் சேதுபதி கடும் கோபத்துடன் பதில் கொடுத்துள்ள வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.

தமிழ் தெலுங்கு இந்தி என பல மொழிகளில் நடித்து பான் இந்தியன் ஸ்டாராக வலம் வரும் நடிகர் விஜயசேதுபதியின் நடிப்பில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வேற லெவலில் உருவாகி உள்ள திரைப்படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’ .

மாபெரும் பொருட் செலவில் உருவாகி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரினா கைஃப் நடித்துள்ளார் மேலும் இவர்களுடன் ராதிகா ஆப்தே, காயத்ரி சரத்குமார், சஞ்சய் கபூர், தினு ஆனந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது .

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கைஃப் ஆகியோர் கலந்துகொண்டனர் .

சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்பட்டது அப்போது பத்திரிகையாளர் ஒருவர், தமிழ் ஹிந்தி தெரியாது போடா என்று சொல்கிறர்கள். நீங்கள் மட்டும் ஏன் ஹிந்தி படங்களில் நடித்து வருகின்றனர் என்று கேள்வி கேட்டார்.

இந்த கேள்வியை கேட்டவுடன் செம கடுப்பான விஜய் சேதுபதி, நடிகர் ஆமிர்கான் வந்தபோது கூட இந்தி தொடர்பான கேள்வியை கேட்டீர்கள்ள்.

இப்போ எதுக்கு இந்த மாதிரியான கேள்வி என்று எனக்குப் புரியவில்லை. இப்படி என்னிடமும் கேட்காதிர்கள் யாரிடமும் கேட்காதீர்கள் .

ஹிந்தி மொழியை திணிக்கக் கூடாது என்று தான் சொன்னார்கள். இந்தி படிக்கக் கூடாது என யாரும் சொல்லவில்லை என காரசாரமான பதிலை நடிகர் விஜய் சேதுபதி கொடுத்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top