Connect with us

“மூளை கம்மி நகைச்சுவை! ரசிகர்களை உருக வைத்த சிவகார்த்திகேயன் 💛பேச்சு!”

Cinema News

“மூளை கம்மி நகைச்சுவை! ரசிகர்களை உருக வைத்த சிவகார்த்திகேயன் 💛பேச்சு!”

Fanly செயலி அறிமுக விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் எப்போதும் போல நகைச்சுவையுடன், நேர்மையாக தனது அனுபவங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார். “மூளை கம்மியாக இருப்பதால்தான் நான் நடிகராக இருக்க முடிந்தது; மூளை அதிகமா இருந்திருந்தா, இயக்குனர்களை ஒவ்வொருவரையும் கேள்வி கேட்டும், தொல்லை செய்தும் இருப்பேன்” என்று அவர் கூறியதும் அரங்கமே முழுக்க சிரிப்பில் மூழ்கியது.

அவரது பேச்சின் முக்கிய பகுதி, ரசிகர்களை பற்றியது. “என்னை ஒரு கடவுளைப் போல ஆராதிக்க வேண்டாம். உங்கள் தாய்–தந்தையையே முதலில் வழிபடுங்கள். என்னை நண்பன், சகோதரன் மாதிரி பார்க்கும் ரசிகர்களே எனக்கு உண்மையாகப் பிடிக்கும்” என்று உண்மையான மனசு திறந்து கூறினார்.

ரசிகர்களை குடும்பம் போல உணர்வதால்தான் அவர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது என்றும், அவர்களின் அன்பு தான் தனது பயணத்திற்கு பெரிய பலம் எனவும் SK உணர்ச்சியோடு தெரிவித்தார்.


மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top