Connect with us

நகைச்சுவை நடிகர் போண்டா மணி மறைவு – தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல்..!!

Cinema News

நகைச்சுவை நடிகர் போண்டா மணி மறைவு – தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல்..!!

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமாகி உள்ளதை அடுத்து அவரது மறைவுக்கு நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் போண்டா மணி பல சூப்பர் ஹிட் படங்களில் வைகை புயல் வடிவேலுடன் இவர் செய்த நகைச்சுவைகள் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது.

இந்நிலையில் நடிகர் ‘போண்டா’ மணிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று கடந்த ஒரு வருடமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று திடீரென மயங்கி விழுந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பே அவர் உயிரிழந்துள்ளார்.

‘போண்டா’ மணியின் உயிரிழப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போண்டா மணியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிருப்பதாவது :

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன்.

என் மீது மிகுந்த அன்பும், நட்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் நண்பர் களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் எடை சரியான அளவில் இருப்பதை உறுதி செய்திடுக - TTV தினகரன் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top