Connect with us

பொங்கல் ரேசில் இணைந்த அருண் விஜயின் “மிஷன் சாப்டர்1- அச்சம் என்பது இல்லையே” திரைப்படம் – வெளியான தாறுமாறு அப்டேட்..

Cinema News

பொங்கல் ரேசில் இணைந்த அருண் விஜயின் “மிஷன் சாப்டர்1- அச்சம் என்பது இல்லையே” திரைப்படம் – வெளியான தாறுமாறு அப்டேட்..

கிளாசிக் ஸ்டார் அருண் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள ‘மிஷன் சாப்டர்1- அச்சம் என்பது இல்லையே’ படம் குறித்த வேற லெவெல் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜயின் மாஸான நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1- அச்சம் என்பது இல்லையே’ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி மெலோடி நாயகன் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகியுள்ளது.

நெடு நீண்ட நாட்களாக இப்படம் குறித்த அப்டேட்டுகள் எதுவும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீச் தேதி குறித்த சிறப்பான தரமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

ஏற்கனவே தனுஷின் கேப்டன் மில்லர், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ், சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்கள் பொங்கல் ரேஸில் இருக்க தற்போது அருண் விஜய்யும் இந்த ரேசில் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் இந்த பொங்கல் ரேஸில் எந்த படம் ரசிகர்களின் மனதை வென்று சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top