Connect with us

அமீர் இயக்கும் புதிய படத்தின் First Look போஸ்டர் வெளியானது..!!

Cinema News

அமீர் இயக்கும் புதிய படத்தின் First Look போஸ்டர் வெளியானது..!!

இயக்குநரும் நடிகருமான அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் First Look போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.

வடசென்னை என்ற சூப்பர் ஹிட் படத்தின் , ராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஒரு நடிகனாக அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர் அமீர் . இதையடுத்து படங்கள் நடிப்பது இயக்குவது என மிகவும் பிஸியாக வலம் வரும் இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் .

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகியோர் எழுதிய கதையில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இறைவன் மிகப் பெரியவன் என இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

கரு பழனியப்பன், அசார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பல சர்ச்சைகளையும் போட்டி பொறாமையையும் சந்தித்து அதிலிருந்து மீண்டு புத்துணர்ச்சியுடன் புதிய படம் இயக்கவுள்ள அமீர் அவர்களுக்கு சினிமா மேடை சார்பாக அன்பும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சட்டென மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் - அரவணைப்புடன் அறிவுரை கூறிய எம்.எஸ்.தோனி..!!

More in Cinema News

To Top