Connect with us

மார்ச் 22 முதல் ஐபிஎல் திருவிழா தொடக்கம்.. சேப்பாக்கத்தில் முதல் போட்டியை நடத்த முடிவு

IPL2024

Featured

மார்ச் 22 முதல் ஐபிஎல் திருவிழா தொடக்கம்.. சேப்பாக்கத்தில் முதல் போட்டியை நடத்த முடிவு

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2024) 17வது சீசன் மார்ச் 22 அன்று தொடங்கும் என்றும், தொடக்க ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் நிர்வாக கவுன்சில் தலைவர் அருண் துமால் இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார். மேலும், ஐபிஎல் போட்டி அட்டவணை இரண்டு பகுதிகளாக பிரித்து வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. எனினும், தேர்தலின்போது ஐபிஎல் போட்டிகளை நடத்துவது பாதுகாப்பு கொடுப்பதில் சிக்கலை ஏற்படுத்தும்.

இதனால் போட்டித் தொடர் வேறு நாட்டுக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், முழுக்க முழுக்க இந்தியாவிலேயே போட்டி நடக்கும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துவிட்டது. இந்நிலையில், அரசு நிர்வாகத்துடன் இணைந்து போட்டி அட்டவணையை இரண்டு தொகுதிகளாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, முதல் 15 நாட்களுக்கான ஐபிஎல் போட்டி அட்டவணை முதலில் அறிவிக்கப்படும் என்று துமல் உறுதிப்படுத்தினார். மீதமுள்ளவை மக்களவை தேர்தல் தேதி வெளியான பின் வெளியிடப்படும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top