Connect with us

பல்லாயிரம் கோடியைத் தாண்டிய சொத்து மதிப்பு – நடிகர் அரவிந்த் சாமி பற்றி தெரியாத உண்மைகள்!

Featured

பல்லாயிரம் கோடியைத் தாண்டிய சொத்து மதிப்பு – நடிகர் அரவிந்த் சாமி பற்றி தெரியாத உண்மைகள்!

மணி ரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி இருவரும் இணைந்து நடித்த தளபதி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அரவிந்த் சாமி. இதையடுத்து, ரோஜா திரைப்படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்தார்.

தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய அவர், 2006ஆம் ஆண்டு பிறகு சில வருடங்கள் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். பின்னர், 2013ஆம் ஆண்டு மீண்டும் மணி ரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் திரும்பி வந்தார். அதன் பிறகு, மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன் திரைப்படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த் சாமி, தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன்களில் ஒருவராக மாறினார். மேலும், கடந்த ஆண்டு வெளிவந்த மெய்யழகன் திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இன்று நடிகர் அரவிந்த் சாமி தனது 55வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். இதே நேரத்தில், நடிகர் அரவிந்த் சாமியின் சொத்து மதிப்பு குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளன. சினிமா மட்டுமல்லாது, வணிகத் துறையிலும் அவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.

அவருடைய Talent Maximus நிறுவனத்தின் வருமானம் கடந்த சில ஆண்டுகளுக்குள் 412 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ. 3300 கோடியாகும். மேலும், அவருக்கு பல கோடி மதிப்புள்ள சொகுசு வீடுகள், கார்கள் மற்றும் சினிமாவிலிருந்து வரும் வருமானம் என, அரவிந்த் சாமி ஒரு அரச குடும்ப வாழ்கையை அனுபவித்து வருகிறார். இது போன்ற சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன. ஆனால், இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத தகவல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பறந்து போ & 3BHK: 12 நாட்களில் வசூல் விவரம் என்ன தெரியுமா?

More in Featured

To Top