Connect with us

நடக்க முடியாத பிரியங்கா… ஏர்போர்ட்டில் எப்படி வந்துள்ளார் பாருங்க..

Featured

நடக்க முடியாத பிரியங்கா… ஏர்போர்ட்டில் எப்படி வந்துள்ளார் பாருங்க..

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவரான பிரியங்கா தேஷ்பாண்டே, சமீபத்தில் தனது காதலரான வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமண மகிழ்ச்சியில் இருந்த அவர், குறுகிய காலத்திலேயே காலில் ஏற்பட்ட காயத்தால் நடக்க முடியாத நிலைக்கு ஆளாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்த செய்தியை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் திரை உலக நண்பர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவித்தனர். நடக்க முடியாத நிலையிலும், ப்ரியங்கா தனது பணியை விட்டுவைக்காமல், தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இது அவரது பணி நெறிமுறைக்கும், உறுதியுக்கும் உதாரணமாக உள்ளது.

இந்நிலையில், தற்போது ப்ரியங்கா ஒரு விமான நிலையத்துக்குள் சென்றுள்ளார். நடக்க முடியாத சூழ்நிலையில், தனது பயணச் சூட்கேஸ் ட்ராலியின் மீது அமர்ந்து விமான நிலையத்தில் நகர்ந்தபடி சென்றதைக் காணலாம். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திருமணத் தகவலை உறுதிப்படுத்திய தான்யா ரவிச்சந்திரன் – வருங்கால கணவருடன் நெருக்கமான புகைப்படம் வைரல்!

More in Featured

To Top