Connect with us

திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் ஆதியின் Pt Sir திரைப்படம் – முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் ஆதியின் Pt Sir திரைப்படம் – முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா..?

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள Pt Sir திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் கலக்கி வருபவர் ஹிப்ஹாப் ஆதி . இவரது இசையிலும் நடிப்பிலும் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் தான் ‘PT சார்’ கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ள இப்படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

ரசிகர்கள் மத்தியில் ஏக போக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரபு, முனீஷ்காந்த், பாண்டியராஜன், இளவரசு,தியாகராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .

இப்படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் முதல் வசூல் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படம் உலகளவில் ரூ. 1 கோடி வரை வசூல் செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மருத்துவரான நடிகை மஞ்சு வாரியரின் மகள் - வைரல் போட்டோ..!!

More in Cinema News

To Top