Connect with us

காலணியோடு காவடி எடுத்த அண்ணாமலை – ட்விட்டரில் கிழித்தெடுத்த நடிகை காயத்ரி ரகுராம்..!!

Featured

காலணியோடு காவடி எடுத்த அண்ணாமலை – ட்விட்டரில் கிழித்தெடுத்த நடிகை காயத்ரி ரகுராம்..!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை காலணியோடு காவடி எடுத்து நடனமாடியதற்கு நடிகையும் பாஜக முன்னாள் நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை காலில் காலணி அணிந்தபடி காவடி ஆட்டம் ஆடுவது போன்ற புகைப்படம் இணையத்தில் செம வைரலாக வலம் வந்தது .

இந்நிலையில் பயபக்தியுடன் வணங்க வேண்டிய தெய்வத்தின் அடையாளத்திற்கு உரிய மதிப்பு கொடுக்காமல் போற போக்கில் விளையாட்டாக இப்படி காலணியுடன் அண்ணாமலை ஆடியுள்ளாரே என பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .

அரசியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவரே இப்படி செய்யலாமா என பலரும் பல விதமான கேள்விகளையும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகையும் பாஜக முன்னாள் நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் அவர்களும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம் கூறியதாவது :

காலணியோடு காவடி எடுக்கிறான். வன்மையாக கண்டிக்கிறோம் தமிழகடவுள் முருகன் பெருமானின் மிகவும் எல்லோரும் பயபக்தியுடன் செய்யும் சடங்கு இது.

பிஜேபி தமிழ் மக்களின் நம்பிக்கை அவமதிப்பு செய்யலாக கருத்தவேண்டும்.. அண்ணாமலை கத்துக்குட்டி இப்படி அவமதிப்பு செய்வதை நிறுத்தி கொள்ளவேண்டும் என தனது ட்விட்டர் பதிவில் காயத்திரி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அதிமுக மேடையில் தவெகக் கொடி ஏன்? 😮 கருணாஸ் சொன்ன அதிரடி விளக்கம் – அரசியல் பின்னணி வெளிச்சம்!

More in Featured

To Top