Connect with us

வசூல் மழையில் அருண் விஜயின் மிஷன் படம் – இதுவரை எவ்ளோ கலெக்சன் தெரியுமா..?

Cinema News

வசூல் மழையில் அருண் விஜயின் மிஷன் படம் – இதுவரை எவ்ளோ கலெக்சன் தெரியுமா..?

அருண் விஜயின் மிரட்டலான நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் மிஷன் 1 படத்தின் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்கள் பட்டியலில் ஒருவராக இருக்கும் ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜயின் மாஸான நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1.

இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி மெலோடி நாயகன் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகியுள்ளது.

தனுஷின் கேப்டன் மில்லர், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ், சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்கள் பொங்கல் ரேஸில் இருக்க , அருண் விஜயின் மிஷன் படமும் இந்த ரேசில் இணைந்தது.

இந்நிலையில் கேப்டன் மில்லர் அயலான் உள்ளிட்ட படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் அருண் விஜயின் மிஷன் படத்துக்கும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் ரசிகர்களை மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

அந்தவகையில் இப்படமா தற்போது வரை ஈட்டியுள்ள வசூல் விவரம் தற்போது வெளியாகி உள்ளது .அதன்படி இப்படம் 5 நாட்களில் சுமார் 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top