Connect with us

தமிழக மக்களிடம் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் – கே.பாலகிருஷ்ணன் காட்டம்

Featured

தமிழக மக்களிடம் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் – கே.பாலகிருஷ்ணன் காட்டம்

ஊடகவியலாளர் சந்திப்பில் நெறியாளர் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அநாகரீகமாக பேசியது வன்மையான கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டி குறித்து உதயநிதிக்கு பல்லு படாதது போல நெறியாளர் கேள்விகளைக் கேட்டிருக்கிறார் என விமர்சிக்கும் வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

அண்ணாமலையின் இந்த பேச்சு மோசமான இரட்டை அர்த்தத்தில் இருப்பதாக ஊடகவியலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளதுடன், அண்ணாமலை உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், அண்ணாமலையின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை இன்று சந்தித்த கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது :

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, சமீபத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நெறியாளர் குறித்து அநாகரீகமாக பேசியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

பொது வெளியில் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியதற்காக தமிழக மக்களிடம் அண்ணாமலை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top