Connect with us

அஞ்சாதே பட நடிகர் ஸ்ரீதர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழப்பு

Anjathe Sridhar

Cinema News

அஞ்சாதே பட நடிகர் ஸ்ரீதர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழப்பு

அஞ்சாதே படத்தில் நடித்து பிரபலமான நடிகர் ஸ்ரீதர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இன்று அதிகாலை காலமானார்.

மிஸ்கின் இயக்கத்தில் 2008இல் வெளியான அஞ்சாதே திரைப்படத்தில் கால் ஊனமுற்ற நபராக ஸ்ரீதர் நடித்திருந்தார். தன் மகன் கண் முன்னே காவல்துறையால் சுட்டுக்கொல்லப்படும் காட்சியில் மிகவும் தத்ரூபமாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

எனினும், சரியான வாய்ப்பு கிடைக்காததால் கிடைக்கும் வேடங்களில் நடித்து வந்தார். மேலும், விரைவில் ஒரு படத்தை இயக்கம் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இது தமிழ் திரையுலக வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கார் ரேஸில் கலக்கப்போகும் அஜித் - நடிகர் மாதவன் புகழாரம்..!!

More in Cinema News

To Top