Connect with us

நடிகர் ரஜினிகாந்துக்கு Golden Visa வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்..!!

Cinema News

நடிகர் ரஜினிகாந்துக்கு Golden Visa வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஐக்கியாரபு அமீரகம் அந்நாட்டின் கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் . என்னதான் வயதானாலும் இவரின் ஸ்டைலையும் அதிரடியான நடிப்பையும் மிஞ்ச இன்று வரை யாரும் வரவில்லை.

அந்தவகையில் இவரது நடிப்பில் தற்போது வேட்டையன் படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது . இந்த படத்தை முடித்த கையோடு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாக இருக்கும் கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் சிறிது பிரேக் எடுத்துக்கொண்டு துபாய் சென்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஐக்கியாரபு அமீரகம் அந்நாட்டின் கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்துள்ளது.

திரைத்துறையில் மக்கள் மத்தியில் பிரபலமான கலைஞர்களுக்கு ஐக்கியாரபு அமீரகம் அந்நாட்டின் கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது . 10 ஆண்டுகள் வரை இந்த கோல்டன் விசாவை உபயோகிக்கலாம் .

ஏற்கனவே பிரித்விராஜ், துல்கர் சல்மான், மம்முட்,டி மோகன்லால், ஆஷாசரத் சந்தோஷ் சிவன், சித்ரா, நடிகை த்ரிஷா , காஜல் அகர்வால், பார்த்திபன், லட்சுமி ராய், பிரனீதா, நாசர், விஜய் சேதுபதி உள்ளிட்டோருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

அந்தவகையில் துபாய் சென்றுள்ள ரஜினிகாந்துக்கு அபுதாபியில் நடந்த நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோல்டன் விசா வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இரண்டு பாகங்ககளாக உருவாகிறதா இளையராஜாவின் பயோபிக்..? வெளியான டக்கர் தகவல்..!!

More in Cinema News

To Top